அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை, மகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மகள் மற்றும் இரண்டு பேத்திகளுடன் தந்தை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் பெட்ரோல் டேங்க் மீது அமர வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் படுகாயமடைந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனர்.






