மகனின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்து விட்டு திரும்பிய பொழுது நடந்த விபத்து..!
மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் இந்த விபத்து நேரிட்டது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது எதிர் திசையில் வந்த ஆட்டோ மோதியது.
இதில் ஆட்டோவில் பயணித்த சென்னை ஆலந்துறையை சேர்ந்த கோவிந்தன் அவரது மனைவி மகன் மற்றும் இரண்டு பேத்திகளாகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதியில் மாவட்ட எஸ்பி நேரில் பார்வையிட்டார்.
விபத்தில் உயிரிழந்த கோவிந்தனின் இளைய மகன் விஜய்க்கு வரும் 25ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இதனால் இளையமகள் மற்றும் உறவினர்களுக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு மகள் பேத்திகளை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் திரும்பிய பொழுது விபத்து ஏற்பட்டது.
விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





