--- --:--:-- --

அதிமுகவை விட்டுவிட்டு பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..?

8

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அந்த கட்சி மூத்த தலைவர்கள் குழு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தது. இந்த சந்திப்பின் பொழுது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

லோக்சபா தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு பாஜகவினருக்கு 20 சீட்டு கொடுத்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி எனது திடீரென பேச தொடங்கிவிட்டனர்.

 

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டிருக்கிறது. பாஜகவில் இருக்கிற மொத்த பேரும் ஒரே நேரத்தில் போட்டி போட போகிறீர்களா என பேசி வருகின்றனர்.

 

இந்நிலையில் கர்நாடக தேர்தல் களத்தில் பிஸியாக இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவரும் கர்நாடக மாநில பாஜக மேல்நிலைப் பொறுப்பாளருமான அண்ணாமலையிடம் அதிமுக குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

 

அப்பொழுது எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என திட்டவட்டமாக அண்ணாமலை கூறினார். அதே நேரத்தில் பாஜகவில் ஓபிஎஸ் இணைவார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என ஒரு வரியில் மட்டும் அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon