கோவையில் சுரங்கப்பாதையில் மழை நீரில் சிக்கிய பேருந்து..!
ஈரோடு, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மிதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளின் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
கனமழையால் சாலைகள் மற்றும் சுரங்க பாலங்களில் மழைநீர் தேங்கியது. கவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள சுரங்க பாலத்தில் குளம் போல் மழை நீர் தேங்கி இருந்த நிலையில் அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து நீரில் சிக்கியதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





