நாட்டின் 16வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!
நாட்டின் 16வது வந்தே பாரத் ரயிலை இந்த மாத இறுதியில் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மத்திய வந்தே பாரத் ரயில் சேவை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட வரவேற்பு பெற்றுள்ளது.
இதுவரை 15 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 16 வது ஒடிசா மாநிலத்தில் இந்த மாத கடைசியில் பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார். பூரி – ஹவுரா வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





