விரைவில் அமைச்சரவை மாற்றம்.. முதல்வர் இன்று ஆலோசனை..!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறைவாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலினின் ஜப்பான் பயணம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
புதிய தொழில் நிறுவனங்களுக்கான அனுமதியும் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





