சாலையோர பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து.. பயணிகள் கடும் அவதி..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் சென்று அரசு பேருந்து ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். கோட்டூர் சாலையில் இருபுறமும் பொதுப்பணித்துறை சார்பில் மழை நீர் வடிவால் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குழாய்களைப் பறித்து மண்ணை போட்டு மூடி இருந்த இடத்தில் சென்ற அரசு பேருந்து சிக்கிக் கொண்டது. இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்ற பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பணிகள் முடிந்த உடன் அந்த இடத்தை முறையாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





