--- --:--:-- --

பகுதி நேர வேலைக்கு சென்ற மாணவருக்கு நடந்த துயரம்..!

1

மீஞ்சூரில் திருமண மண்டபத்தில் சுடச்சுட ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த வந்தார்.

 

பகுதி நேர வேலையாக திருமண மண்டபத்தில் உணவு பரிமாறும் வேலையை செய்து வந்தார். மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 24ஆம் தேதி உணவு பரிமாற சென்றுள்ளார்.

 

அப்பொழுது அங்கு சுடச்சுட இறக்கி வைக்கப்பட்டிருந்த ரச பாத்திரத்தில் சதீஷ் தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon