--- --:--:-- --

கேள்வித்தாளில் 3 கேள்விகளில் குளறுபடி.. மதிப்பெண் வழங்க தேர்வு துறைக்கு கோரிக்கை..!

5

த்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான ஒரு மதிப்பெண் கேள்விப்பகுதியிலும் மூன்று கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வு துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடந்தது. வினா எண் 4, 5, 6 ஆகியவற்றிற்கு ஆன்டனிம்ஸ் என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால் மாணவர்கள் விடை அளிக்க திணறியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தேர்வு துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

அந்த கடிதத்தில் ஒரு மதிப்பெண் வினாவிற்கான 4,5,6 கேள்விகளுக்கான விடையில் சினானியம் ஆண்டனியம் இரண்டும் இருப்பதால் மாணவர்கள் விடையளிக்க சிரமப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. இந்த வினாக்களுக்கு விடை எழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

வினாத்தாள் முறையாக பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் பதில் அளித்துள்ளார்.

 

Right Menu Icon