--- --:--:-- --

மீண்டும் விவாகரத்தா? விஷ்ணு விஷால் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்..!

11

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளரும் நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக கட்டா குஸ்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. விஷ்ணு விஷால் ஒரு டீவீட்டை போட்டிருக்கிறார். “நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்று விட்டேன், நான் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை தோல்வி அல்ல, என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றுதல்” என விருஷன்னு விஷால் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

இதை பார்த்த ரசிகர்கள் ‘மீண்டும் விவாகரத்தா?’ என கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். அதனால் அந்த பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார் விஷ்ணு. முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பிறகு பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்தார் விஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon