பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளி சென்ற காவலர்கள்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை காவல்துறையினர் தள்ளிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளன. இதனால் அடிக்கடி பழுதாகி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்து ஒன்று நடுவழியில் பழுதடைந்து நின்றுள்ளது. அரை கிலோ மீட்டர் தூரம் முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணிகள் இறங்கி நடந்து சென்றனர்.
இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் சேர்ந்து பேருந்தை தள்ளிக்கொண்டு பேருந்து நிலையத்தை அடைந்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





