--- --:--:-- --

ரயில் நிலையத்தில் திடீரென ஒளிபரப்பப்பட்ட ஆபாச காட்சி..!

4

பீகாரில் ரயில் நிலைய விளம்பரத்துறையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் துறையில் மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானது.

 

இதனை பார்த்த பொது மக்கள் முகம் சுளித்த நிலையில் ரயில்வே நிர்வாகத்திற்கு இது குறித்த தகவலும் அளிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடியோ காட்சியை உடனடியாக அகற்றினர்.

 

சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டத்துடன் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே செல்போன்களில் பயணிகளால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon