--- --:--:-- --

அரசு மருத்துவமனை அலட்சியம் பிரசவத்தில் கீழே விழுந்து குழந்தை பலி..!

7

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை செவிலியர் அலட்சியத்தின் காரணமாக கையில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயரிழந்ததாக கூறி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண் பிரசவத்திற்காக கடந்த 8ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது பனிக்குடம் உடைந்ததால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சந்தியாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

ஆனால் குழந்தையை பெற்றோரிடம் காட்டாமல் மருத்துவமனை நிர்வாகம் வெண்டிலேட்டரில் வைக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில் ஒரு வாரம் கழித்து குழந்தை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிரசவம் பார்க்கும் பொழுது செவிலியர் ஒருவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் பிரசவம் பார்த்த பொழுது குழந்தை கை தவறி கீழே விழுந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக குழந்தை இறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon