மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்த கொடூரன்..!
நத்தம் அருகே மாற்றித்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் அருகே மாற்று திறனாளியான 16 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்த போலீசார் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்த நிலையில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





