நீ கொஞ்சம் வாய மூடு என பெண்ணிடம் அமைச்சர் பொன்முடி அநாகரிக பேச்சு..!
திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு பெண் குறுக்கிட உடனடியாக அமைச்சர் நீ கொஞ்சம் வாய மூடு என பேசியது மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் புதிதாக சீரமைக்கப்பட்ட கோஷா குலம் மற்றும் விஜயலட்சுமி நகரில் புதிதாக உருவாக்கப்பட்டதை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசி கொண்டிருந்த பொழுது ஒரு பெண், எல்லாம் குறையாக தான் இருக்கு என கூறினார். அதற்கு அமைச்சர் நீ கொஞ்சம் வாயை மூடு என கூறினார்.
அத்துடன் உங்கள் வீட்டுக்காரர் இருக்காரா என அமைச்சர் கேட்க, அந்த பெண் அவர் எப்பயோ போயிட்டார் என பதில் அளிக்க பரவாயில்லை நல்லவேளை அவர் போய் சேர்ந்துட்டாரு என கிண்டலாக தெரிவித்துள்ளார். அரசு விழாவில் அமைச்சர் இவ்வாறு பேசியதும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





