--- --:--:-- --

ஒருதலைக் காதலால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்..!

10

நெல்லையில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் மெக்கானிக் திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.

 

இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon