மகன் இல்லாததால் மூன்று மகள்கள் முன்னிலையில் மனைவியை மறுமணம் செய்த நடிகர்..!
கேரளாவில் சிறந்த நடிகரும் வழக்கறிஞருமான சுக்கு அவரது மனைவியை மூன்று மகள்களின் முன்னிலையில் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
மூத்த வழக்கறிஞர் 53 வயதான சுக்கு மலையாளத் திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். இவரது மனைவி கண்ணூர் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 29 ஆண்டுகளாக ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் தம்பதிக்கு மகன் இல்லாததால் இஸ்லாமிய சட்டத்தின் படி சொத்துக்கள் முழுவதும் மகள்களுக்கு கிடைக்காது. இந்த நிலையில் பெண் குழந்தைகளின் உரிமைகளை காக்க முஸ்லிம் மரபு படி முதலில் திருமணம் செய்து கொண்ட இருவரும் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மறுமணம் செய்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





