--- --:--:-- --

மாணவிகளுக்கு 6 மாத மகப்பேறு விடுமுறை அரசு உத்தரவு..!

10

ந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் மாணவிகளுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர். கேரளப் பல்கலைக் கழகங்கள் அண்மையில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை என அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு இருந்த கேரளா பல்கலைக்கழகங்கள் தான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன.

 

இதன் மூலம் கேரளாவில் 18 வயதிற்கு மேல் உள்ள மாணவிகள் மகப்பேறு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு கேரளாவின் உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 18 வயதுக்கு மேல் உள்ள மாணவிகளுக்கு 60 நாள் மகப்பேறு விடுமுறை வழங்கி வந்தது.

 

பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக கேரளா அரசு எடுத்துள்ள அடுத்தடுத்த முன்னெடுப்புகள் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலுக்கு காரணமாகியுள்ளது.

 

Right Menu Icon