தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற 8ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை,யில் அதிகபட்ச 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸும் வெப்பம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.






