பாஜக பொதுக் கூட்டத்தில் எச்.ராஜாவை தாக்கி பேசிய பெண் நிர்வாகி..!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடந்த பாஜகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் எச். ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.






