கோடைகால ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
நாடெங்கும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாடெங்கும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் கால பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் டெல்லியில் பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து சில மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என பிரதமரிடம் வானியல் அதிகாரிகள் விரிவாக விளக்கினர். இதை தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் வெயில் காலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மருத்துவத்துறையினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
கோடை காலத்தில் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடியோ பதிவுகளை தயாரித்து அதை பொதுமக்களின் பார்வைக்கு பல்வேறு வழிகளில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.
மக்களுக்கான குடிநீருடன் விவசாயத்திற்கு தங்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். வெயில் காரணமாக உடல் நலக்குறைவால் வருபவர்களுக்கு மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





