இசை நிகழ்ச்சியின் போது பாடகரின் தலையில் மோதிய ட்ரோன் கேமரா..!
பாடகர் பென்னி வெள்ளிக்கிழமை அன்று கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். ஊர்வசி ஊர்வசி டேக்கிடிசி ஊர்வசி என அவர் பாடிக்கொண்டிருந்த பொழுதே அங்கு சுற்றி கொண்டிருந்த டிரோன் அவரின் தலையின் பின்புறம் தாக்கியது.
இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்னி வெளியிட்ட வீடியோவில் தலையிலும் விரல்களிலும் காயம் ஏற்பட்டாலும் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நிகழ்ச்சிகளில் முறையான பயிற்சி பெற்ற ட்ரோன் ஆப்ரேட்டர்கள் இருப்பதை உறுதி செய்வதோடு மிக அருகில் ட்ரோன் பறப்பதை அனுமதிக்க கூடாது என சக கலைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





