106 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை..!
கோயம்புத்தூரில் 106 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 106 வயதான முதியவர், சுதந்திரப் போராட்ட வீரர் ஆன இவர் கடந்த மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் முதியவரை குடும்பத்தினர் அனுமதித்தனர். பரிசோதையில் அவரது எலும்புகள் அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் வகையில் உறுதியாக இருந்ததையடுத்து அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்திலேயே முதியவர் சுப்பிரமணியன் நடக்க தொடங்கியுள்ளார்.






