--- --:--:-- --

பாதுகாப்பான டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம் : மோடி

2

பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 நாடுகளில் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் பங்கேற்ற மாநாடு பெங்களூருவில் தொடங்கியுள்ளது.

 

இந்தியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது.

 

இதன் மூலம் அரசு நிர்வாகங்கள் எளிதாக இருக்கிறது என தெரிவித்தார். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதாரம், பருவநிலை மாற்றம் என பல சவால்களை உலகம் சந்தித்து வரும் நிலையில் அனைத்து நாடுகளும் இதை ஏற்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

 

Right Menu Icon