ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் வாக்கெடுப்பில் இந்தியா, சீனா பங்கேற்கவில்லை..!
உக்ரேனில் நீடித்த அமைதியை விரிவாக கொண்டு வர வலியுறுத்தும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது. இது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் உக்கிரனிலிருந்து ரஷ்யா வெளியேற வலியுறுத்தியும் உக்ரேனில் நீடித்த அமைதியை நிலைப்படுத்த கோரியும் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தீர்மானத்தை கொண்டு வந்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனி போர்கள் பிராந்திய ரீதியில் மட்டுமே சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் இதனால் உலக நாடுகளின் கவனம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டவையில் அமெரிக்கா உள்ளிட்ட 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை உக்ரேன் ரஷ்யா பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.





