--- --:--:-- --

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் – மலர் தூவி ஈபிஎஸ் மரியாதை..!

5

சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

 

முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை இன்று அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சென்னையில் இரு இடங்களில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற இருக்கிறது.

 

முதற்கட்டமாக தற்போது சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

பிறகு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்லும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தொண்டர்களோடு இணைந்து வருகை தர இருக்கின்றார்.

 

சென்னை பசுமை வழிச்சாலையில் இருந்து எம்ஜிஆர் மாளிகைக்கு வர தருகை தரக்கூடிய இடைக்கால பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர் சிலையில் இருக்கக்கூடிய ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

 

Right Menu Icon