திருச்சியில் நிதி மூலம் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை கட்டிடத்தை திறந்து வைத்தார் பாரிவேந்தர்..!
ஒற்றை தலைமையை அதிமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பழனிச்சாமிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதிமூலம் 33 லட்சம் ரூபாய் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வகுப்பறை கட்டிடத்தை பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரிவேந்தர் ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் இரட்டை தலைமைக்கு முடிவு வந்து விட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பழனிச்சாமி தமிழ்நாட்டிலேயே சிறந்த தலைவராக உருவெடுப்பார் என கூறினார்.





