சென்னை அண்ணா சாலையில் நில அதிர்வு..!
சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
மூன்று மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து ஊழியர்கள், பொது மக்கள் வெளியேறியுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கட்டிடம் குலுங்கியதா என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






