--- --:--:-- --

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்ற பிக்கப் வாகனம்..!

4

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டையோடு பகுதியில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் போக்கு காட்டிய பிக்கப் வாகனத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களை ஏற்றி கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று நாகர்கோவில் சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் சென்ற பிக்கப் வாகனம் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்கு காட்டியபடி சென்றுள்ளது.

 

இந்த காட்சிகள் போக்குவரத்து காவலர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்புலன்ஸ்க்கு போக்கு காட்டும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon