--- --:--:-- --

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மதுரையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர்..!

3

வேலூர், சேலம் மண்டலங்களைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மார்ச் ஐந்தாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளோடு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வு பணியில் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.

 

இதை தொடர்ந்து முதலமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளோடு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வுக்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon