--- --:--:-- --

குடல் வால்வுக்கு சிகிச்சை செய்த இளைஞர் மரணம்.. அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு..!

2

ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் அலட்சியம் காரணமாகவே கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் பெருமாள் பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காளையப்பனின் மகன் கார்த்திக் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தான். இந்நிலையில் வயிற்று வலியால் துடித்த கார்த்திக்கு தனியார் மருத்துவமனையில் குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 

சிகிச்சை பலனளிக்காமல் கார்த்தி உயிரிழந்தான். அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இது குறித்து தனியார் மருத்துவமனை மேலாளர் பிரதீப் என்பவரிடம் கேட்ட பொழுது அறுவை சிகிச்சையின் பொழுது கவனக்குறைவு அலட்சியம் என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். உடற்கூறாய்வு முடிவுக்கு பிறகு இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon