சேலத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட வாரியாக பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் கொங்கு மண்டலத்தில் தனது கவனத்தை திருப்பவுள்ளார்.
தற்போது இந்த மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தான் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த சூழலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
அதற்கு முன்னதாக கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளுக்கு ஒரு விசிட் அடிக்க இருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்படி, கொங்கு மண்டலத்தில் அதிமுக தான் செல்வாக்கு பெற்று விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் அதிமுக கூட்டணி வசமுள்ளது. ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் திமுக கூட்டணி 3 இடங்களை கைப்பற்றியது.
எனவே ஒன்றுபட்ட திமுகவாக செயல்பட வேண்டும் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம். அதற்காக வரும் 15, 16ஆம் தேதிகளில் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் நான்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அரசின் திட்டங்களை ஆய்வு செய்யும் வகையில் முதல்வரின் பயணம் இருந்தாலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ரகசியமாக பேச வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




