மீண்டும் நயன்தாராவை தாக்கிய மாளவிகா மோகனன்..!
நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாக இருக்கிறார். இங்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர்தான். லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு சோலோவாகவும் படங்கள் நடித்து வருகிறார் அவர்.
மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் முன்பு அளித்த ஒரு பேட்டியில் நயனதாராவை தாக்கி பேசி இருந்தார். ‘சாகும் தருவாயில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு சீனில் கூட முழு மேக்கப் உடன் இருக்கிறார்’ என கலாய்த்து இருந்தார் மாளவிகா.
அதற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா ‘அந்த சீனில் சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் சொன்னார். கமர்சியல் சினிமா இப்படித்தான்’ என கூறினார். இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் ‘நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லாதீங்க’ என கூறி மீண்டும் நயன்தாராவை தாக்கி இருக்கிறார் மாளவிகா மோகனன்.
“தீபிகா படுகோன் ஒரு சூப்பர்ஸ்டார், ஆலியா பட் ஒரு சூப்பர்ஸ்டார்.. இப்படி சொல்லுங்க” என கூறி இருக்கிறார் அவர். நயன்தாரா மீது இருக்கும் பொறாமை குறையவில்லையா என நெட்டிசன்கள் தற்போது மாளவிகாவை விமர்சித்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




