--- --:--:-- --

திருமண போஸ்டரை வித்தியாசமாக ஒட்டிய இளைஞர்கள்..!

2

 செஞ்சி அருகே பரபரப்பு, வாலிபர் கைது, இது நாளேட்டில் இடம் பெற்றுள்ள செய்தி இல்லை. விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் சுற்றுவட்டாரத்தில் ஒட்டப்பட்டுள்ள திருமண போஸ்டர்.

 

அன்னமங்கலத்தை சேர்ந்த அருண் மற்றும் கனக லக்ஷ்மிக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. அதை ஒட்டி அருணின் நண்பர்கள் வித்தியாசமான முறையில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.

 

அதில் பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக மூன்று முடிச்சு போடும் தண்டனை மணமகனுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதானவர் அருண் என்றும், கைது செய்தவர் கனகலட்சுமி என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமணம் நடைபெறும் நாளை கைது செய்யும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon