ஸ்கூல் மைதானத்தில் திடீரென இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு..!
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதி அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியுள்ளது. இதனால் ஹெலிகாப்டரை காண பொதுமக்கள் கூடினர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய பொழுது நிறுவனர் ரவிசங்கர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தது தெரிய வந்தது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதும் தெரியவந்தது.





