--- --:--:-- --

காஷ்மீரில் ராகுல் யாத்திரை திடீர் ரத்து..!

5

ம்மு காஷ்மீரில் மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதையாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை பல மாநிலங்களை கடந்து கடந்த 19ஆம் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது.

 

நேற்று ஜம்மு பிராந்தியத்தில் ராணுவ பாதுகாப்பு அருகே காலை 8 மணியளவில் பாதயாத்திரை தொடங்கப்பட்டது. நேற்றைய பாதயாத்திரையில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் மோசமான வானிலை மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெற இருந்த ராகுல் காந்தி யாத்திரை ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

 

Right Menu Icon