ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி..!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த அளவில் அரிசி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, நிறையப் பேரின் பெயர்களும் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசு சார்பாகவும் ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.
உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், வேட்டி – சேலை, நிதியுதவி போன்ற உதவிகளும் கிடைக்கின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. இலவச ரேஷன் வாங்குபவராக இருந்தால் ரேஷன் கார்டு விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் முக்கிய முடிவு எடுத்துள்ளது. இனி நிறையப் பேருக்கு முன்பை விட குறைவான ரேஷன் மட்டுமே கிடைக்கும்.
ரேஷன் கார்டு விதிகளை மாற்றும் போது அரிசி ஒதுக்கீட்டை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இனி தெலங்கானா மாநிலத்தின் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு முன்பை விட 1 கிலோ அரிசி குறைவாக கிடைக்கும். தெலுங்கானா அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அரிசி விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




