--- --:--:-- --

நடுவானில் திடீரென ஆஃப் ஆன விமானம்..!

7

டுவானில் என்ஜின் செயலிழந்ததால் நியூசிலாந்து விமானம் ஆஸ்திரேலியாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 145 பயணிகள் உயர்த்தப்பினர்.

 

நியூசிலாந்து நாட்டில் இருந்து ஆஸ்திரேலியா சிட்னி நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தின் 145 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்து நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தில் இரண்டு இன்ஜின்களில் ஒன்று திடீரென செயல் இழந்தது.

 

இதனால் விமானத்தில் வேகம் குறைந்தது குறைவான உயரத்தில் பறந்தது. விமானம் குறைவான உயரத்தில் பறந்தது. இதையடுத்து விமானிகள் விமானம் ஆபத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

அதனையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க கேட்டுக்கொண்டனர். மேலும் விமான நிலைய ஓடு பாதையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

 

Right Menu Icon