--- --:--:-- --

லஞ்சம் மேலோங்கி உள்ளதாக குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்..!

6

கையில் பணத்துடன் சட்டசபைக்கு வந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

 

டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்ட தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கையில் கட்டு கட்டாக பணக்கட்டை கொண்டு வந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அரசால் நடத்தப்படும் மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் பணி நியமனத்திற்கு பிறகு செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையில் பிற பணியாளர்கள் முழுமையான சம்பளம் பெறக்கூடிய விலை எனவும் தெரிவித்தார். இது குறித்து டிஜிபியிடம் முன்பே கூறியதாகவும் இதனை வெளிக்கொண்டு வருவதற்காக 15 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

 

இந்த ஊழலில் பெரிய நபர்கள் தொடர்பில் உள்ள நிலையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

Right Menu Icon