--- --:--:-- --

நிலப் பிரச்சினை காரணமாக 2 பேர் கொலை.. இளைஞர் கைது..!

5

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் செல்லதுரை ஆகியோர் நிலப் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று இருவரும் வழக்கம் போல் வாய் தகராறில் ஈடுபட்டு பின்னர் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ஐயப்பன் என்பவரை செல்லதுரை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் மகன் கருப்பசாமி பழிக்கு பழியாக செல்லத் துறையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon