கொரோனா பணியில் உயிரிழந்த செவிலியர் நிவாரணம் கோர முடியாது தமிழக அரசு..!
கொரோனா பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளர்களின் உறவினர்கள் மத்திய, மாநிலம் என இரு அரசுகளிடம் நிவாரணம் கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலக்ஷ்மி என்பவர் 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
தனது மனைவியின் இறப்புக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட கோரி தனலட்சுமி கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது பிரதம மந்திரி கரிஷ் கல்யாண் என்ற காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கனவே 50 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மத்திய அல்லது மாநில அரசு திட்டத்தின் கீழ் பயன்படலாம் என குறிப்பிட்ட நீதிமன்றம் இரு அரசுகளிடமும் நிவாரணம் கோர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.





