--- --:--:-- --

தானாக பற்றிய ஊராட்சி மன்ற தலைவரின் கார்..நெல்லையில் பரபரப்பு..!

8

நெல்லையில் ஊராட்சி மன்ற தலைவரின் காரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் சாந்தகுமார் என்பவர் தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

 

திரும்பும் வழியில் உறவினர்களுக்கு மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்கு காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது காரில் உள்ளே உராய்வு ஏற்பட்டு தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

 

அப்பொழுது பாதுகாப்பணியில் இருந்த போலீசார் அங்கிருந்து தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் முயற்சி ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

Right Menu Icon