--- --:--:-- --

ஒரே வீட்டில் 2500 சிம் கார்டுகள் பதுக்கல்..!

1

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 2500 க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய கேரளா தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கேரளாவை சேர்ந்த பஷீர் – சஞ்சனா தம்பதி சில மாதங்களுக்கு முன்பு தங்கி உள்ளனர் இவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமான அழைப்புகள் சென்றுள்ளன.

 

வருவாய் இணைப்பு ஏற்பட்டதை அடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் தம்பதி வசித்த வீட்டை திறந்து சோதனையிட்ட பொழுது 2500 சிம் கார்டுகள், தொழில்நுட்ப காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஆய்வில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான கேரள தம்பதியை கண்டுபிடித்து நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon