பொங்கல் பண்டிகை : மூன்று நாட்களுக்கு பேருந்து..!
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்கள் சிரமமின்றி பயணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் 449 சிறப்பு பேருந்துகளும் மற்ற இடங்களில் 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு கே.கே.நகர் மாதவரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஊர்களுக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 360 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பினால் கூட கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





