ஜாதகம் சரி இல்லை எனக்கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்த விஏஓ..!
காஞ்சிபுரத்தில் காதலியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பெரும்பதூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராஜேஷும், இளம்பெனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்ட பொழுது ஜாதகம் சரியில்லை என கூறிய அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததோடு பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை ராஜேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





