--- --:--:-- --

டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

2

மிழகம் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தரிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசப்படும் என்பதால் குமரி கடல், மன்னார் குளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Right Menu Icon