கிளாமர் தவிர உனக்கு வேற என்ன தெரியும்.. விமர்சித்தவருக்கு தர்ஷா குப்தா வீடியோ வெளியிட்டு பதிலடி
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. சின்னத்திரை நடிகையாக அறிமுகமான இவர், பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் பங்கேற்று பிரபலமானார். 2021-ல் வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார் தர்ஷா.
இதைதொடர்ந்து சன்னி லீயோன் நடித்துள்ள “ஓ மை கோஸ்ட்” படத்திலும் இவர் நடித்துள்ளார். இப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் தர்ஷா, அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடும். இந்நிலையில் இவர் சமீபத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு ” உனக்கு இது தவிர வேறு என்ன தெரிய போகிறது ? என்று கமன்ட் செய்துள்ளனர்.
இதற்கு தர்ஷா, ஓ மை கோஸ்ட் படத்தில் தான் ரிஸ்க் எடுத்து நடித்த ஸ்டண்ட் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “கவர்ச்சி தாண்டி என்ன தெரியும் என கேட்டவருக்கு என்னுடைய உழைப்பையும், நடிப்புத்திறனையும் காட்டியுள்னேன். இந்த ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கும் போது காலையில் இருந்து மாலை வரை நான் எதுவும் சாப்பிடவில்லை” என்று தன் மேல் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார்.






