நீரில் மூழ்கிய மருமகனை காப்பாற்ற சென்று தாய்மாமனும் பலியான சோகம்..!
திருச்சி அருகே பள்ளி மாணவன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காப்பாற்ற முயன்றே அவரது தாய் மாமனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாற்றுகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் சண்முகம்.
இவரது அக்கா மகன் நந்தகுமார். 12ஆம் வகுப்பு படித்த வந்த நிலையில் விடுமுறைக்காக தாய்மாமன் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை காப்பாற்ற சண்முகம் முயற்சி செய்த பொழுது இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த மீட்பு துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே விடுமுறைக்காக வந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





