--- --:--:-- --

பொங்கல் பரிசுக்கு இவர்கள்தான் முழு பொறுப்பு..!

2

பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தினை உரிய முறையில் விநியோகிக்கும் முழு பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களையே சாரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்குவது தொடர்பான மாவட்ட ஆட்சியர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் பொறுப்பு உள்ளிட்டோருக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

 

அனைத்து அரிசி பெறும் குடும்பத்தைதாரர்களுக்கும் இளைஞர் தமிழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு, 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 

பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தினை அனைத்து அரசு குடும்பத்தினர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்கவேண்டிய முழு பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களையே சாரும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரையில் வடக்கு மற்றும் தெற்கு துணை ஆணையர்கள் இந்த பணிகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகள் என்றும் சுற்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசை முறையாக வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் சுற்றறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon