சீனாவில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா..!
சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவர், அவரது 6 வயது மகளுக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சேலம் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே தொற்று கண்டறியப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.





